இராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடியில் செயல்பட்டு வருகிறது கலை ஸ்போர்ட்ஸ் அகடாமி இங்கு கராத்தே மாஸ்டரும் அகடாமியின் நிறுவனருமான கலைக்குமார் மாணவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் சிறப்பு பயிற்சி முகாம் அமைக்கப்பட்டு மாணவர்களுக்கு சிலம்பம், கராத்தே, செஸ், பரதநாட்டியம், பயிற்சி வழங்கப்படுவது வழக்கம் இந்த நிலையில் இன்று ஆர்.எஸ் மங்கலம் அருகே உள்ள உப்பூர் டோனி நர்சரி அண்ட் ப்ரைமரி பள்ளியிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று கராத்தேவில் குமித்தே சண்டை பயிற்சி, சிறப்பு கராத்தே கட்டா பயிற்சிகளும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய டோனி நர்சரி அண்டு பிரைமரி பள்ளி முதல்வர் முனியாண்டி தங்களது பள்ளிமாணவர்கள் புதுவிதமான கராத்தே சண்டை பயிற்சிகளை கற்றுக் கொண்டது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்ததோடு ஒவ்வொரு மாதமும் தங்களது பள்ளிக் மாணவர்களை தற்காப்பு கலைகளை மேம்படுத்துவதற்காக சத்திரக்குடி கலை ஸ்போர்ட்ஸ் அகடாமிக்கு அழைத்து வருவேன் என நெகிழ்ச்சியோடு தெரிவித்தர்
சத்திரக்குடி கலை ஸ்போர்ஸ் அகடாமியின் சார்பில் கராத்தே சிறப்பு பயிற்சி முகாம்.. நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு..
எழுதியவர்: ஆசிரியர் February 15, 2025, 3:16 pm




You must be logged in to post a comment.