18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இரு சக்கர வாகனம் ஓட்டி வந்த வாகன ஓட்டிகள் 100 பேருக்கு அரை கிலோ ஸ்வீட் வழங்கி காதலர் தின வாழ்த்துகள் தெரிவித்த காவல் துறையினர்..

இரு சக்கர வாகனம் ஓட்டி வந்த வாகன ஓட்டிகள் 100 பேருக்கு அரை கிலோ ஸ்வீட் வழங்கி காதலர் தின வாழ்த்துகள் தெரிவித்த காவல் துறையினர்..

எழுதியவர்: ஆசிரியர் February 15, 2025, 1:09 pm

தஞ்சை மாநகர காவல் துறையினர் ஹெல்மெட் அணிந்து இரு சக்கர வாகனம் ஓட்டி வந்த வாகன ஓட்டிகள் 100 பேருக்கு அரை கிலோ ஸ்வீட் வழங்கி காதலர் தின வாழ்த்துகள் தெரிவித்தனர்.

இருபாலர் மட்டும்தான் காதலர் தினம் கொண்டாட வேண்டும் என்பது இல்லை அனைவரிடமும் அன்பை வெளிப்படுத்தி காதலர் தின வாழ்த்துகள் கூறலாம் என்பதை வெளிப்படுத்தும் வகையில் தஞ்சை மாநகர காவல்துறையினர் தஞ்சை புதிய பேருந்து நிலையம் சாலையில் காதலர் தினத்தை ஓட்டி ஹெல்மெட் விழிப்புணர்வு நிகழ்ச்சியை தஞ்சாவூர் ஜோதி அறக்கட்டளையுடன் இணைந்து நடத்தினர்.

மருத்துவக் கல்லூரி காவல் ஆய்வாளர் சந்திரா தலைமையில் காவல் துறையினர் ஹெல்மெட் அணிந்து இரு சக்கர வாகனம் ஓட்டி வந்த வாகன ஓட்டிகளை நிறுத்தி 100 பேருக்கு தலா அரை கிலோ ஸ்வீட் வழங்கி வாழ்த்துகள் தெரிவித்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை செயலாளர் பிரபு ராஜ்குமார் தலைமையில் மேலாளர் ஞானசுந்தரி செய்திருந்தார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!