17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பாப்பாபட்டி ஆச்சி கிழவி அறக்கட்டளை துவக்கம்

பாப்பாபட்டி ஆச்சி கிழவி அறக்கட்டளை துவக்கம்

எழுதியவர்: mohan February 12, 2025, 10:28 am

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பிரசித்திப்பெற்ற பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோவில். இக்கோவில் சாமியை குல தெய்வமாக வழிபடுபவர்கள் இந்தியாவின் பல பகுதிகளிலும் உள்ளனர்.இந்நிலையில் தேனி மாவட்டம் கம்பத்தை பூர்விகமாகக் கொண்ட இக்கோவில் வம்சாவளியினர் பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களின் குழந்தைகள் கல்வி வளர்ச்சிக்காக பாப்பாபட்டி ஆச்சி கிழவி அறக்கட்டளை என்னும் பெயரில் புதிதாக அறக்கட்டளை துவங்கியுள்ளனார்.இதன் அறிமுகநிகழ்ச்சியாக தைப்பூச திருநாளிலன்று உசிலம்பட்டி அருகே பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோவிலில் பொங்கல் வைத்து ஒச்சாண்டம்மனை வழிபட்டனர்.பாப்பாபட்டி பத்து தேவர் சார்பாக முதற்கட்டமாக குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்கு இந்த அறகக்கட்டளை செயல்படும் என இதன் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!