17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சோழவந்தான் கிரில் சிக்கன் உணவக உரிமையாளர் மீது போலீசார் வழக்கு பதிவு

சோழவந்தான் கிரில் சிக்கன் உணவக உரிமையாளர் மீது போலீசார் வழக்கு பதிவு

எழுதியவர்: mohan February 7, 2025, 5:41 pm

மதுரை சோழவந்தானில் கிரில் சிக்கன் சாப்பிட்டதில் 40க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சோழவந்தான் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சோழவந்தான் பசும்பொன் நகரை சேர்ந்த மூன்று வயது சிறுமி சாரா ஸ்ரீ மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார் இந்த நிலையில சிறுமியின் தந்தை ராஜேஷ்குமார் கொடுத்த புகாரின் பேரில் சிக்கன் உணவக உரிமையாளர் மீது சோழவந்தான் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

ராஜேஷ்குமார் புகாரி கூறி இருப்பதாவது

சோழவந்தான் வைகைப் அருகே உள்ள ப்ரீடா ஹோட்டலில் தினசரி இரவு துரித உணவு வாங்கி சாப்பிடுவது வழக்கம் இதே போல் கடந்த 4ம் தேதி இரவு துரித உணவு வாங்கி நானும் எனது குடும்பத்தினரும் சாப்பிட்டோம் அன்று இரவு மகள் சாராஸ்ரீ வயது 3 குழந்தைக்கு வாந்தி வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சோழவந்தான் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.மேல் சிகிச்சைக்காக மதுரை வேலம்மாள் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர் அங்கு சராஸ்ரீ அவசர பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
எனது மனைவி சண்முகப்பிரியாவுக்கும் உடல்நல குறைவு ஏற்பட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுபோல் இந்த ஓட்டலில் சாப்பிட்ட 40 பேருக்கு உடல் நல குறைவு ஏற்பட்டுள்ளதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார்.

இதன் பேரில் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் ஆகியோர் சம்பந்தப்பட்ட ப்ரீடா ஹோட்டல் உரிமையாளர் மற்றும் நடத்துபவர்கள்மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!