18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சோழவந்தான் காமராஜர் சிலை அருகில் குவிந்துள்ள காலி மது பாட்டில்கள் மற்றும் கப்புகள். நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

சோழவந்தான் காமராஜர் சிலை அருகில் குவிந்துள்ள காலி மது பாட்டில்கள் மற்றும் கப்புகள். நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

எழுதியவர்: mohan February 6, 2025, 11:48 am

மதுரை மாவட்டம் சோழவந்தான் காமராஜர் சிலை அருகே மது பிரியர்களால் காலி மது பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் கப்புகள் குவிந்து கிடக்கின்றது இந்த பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் காலை முதல் இரவு வரை காமராஜர் சிலையின் பின்புறம் அமர்ந்து மது அருந்துபவர்கள் காலி மது பாட்டில்கள் மற்றும் கப்புகளை அங்கேயே விட்டுச் சென்று விடுகின்றனர் இதனால் சுகாதாரத் கேடு ஏற்படுவதுடன் பள்ளி செல்லும் குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்படுவதாக புகார் தெரிவிக்கின்றனர் சோழவந்தான் காவல்துறையினர் பாதுகாப்புக்கு காவலரை நியமித்து காமராஜர் சிலை அருகில் மதுபானம் அருந்துவதற்கு தடை விதிக்க வேண்டும் மற்றும் பேரூராட்சி நிர்வாகம் மூலம் காமராஜர் சிலை பகுதிகளை தூய்மையாக வைத்திருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!