18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆதாய கொலை குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் அடிதடி வழக்கில் இருவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு..

ஆதாய கொலை குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் அடிதடி வழக்கில் இருவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு..

எழுதியவர்: Abubakker Sithik February 5, 2025, 9:46 am

சிவகிரியில் ஆதாய கொலை வழக்கின் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் செங்கோட்டையில் அடிதடி வழக்கின் இரண்டு குற்றவாளிகளுக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தென்காசி நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

 

தென்காசி மாவட்டம் சிவகிரி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில், கடந்த 2016 ஆம் ஆண்டு ஒரு பெண்ணை கொலை செய்து அவரிடம் இருந்து நகைகளை திருடி சென்ற வழக்கில் குமரபுரம் சமுத்திரவேல் என்பவரின் மகன் தங்கமாரி (34) என்பவரை சிவகிரி காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

இந்நிலையில் வழக்கின் விசாரணை தென்காசி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வழக்கை விசாரணை செய்த நீதிபதி ராஜவேல் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் 9,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

 

இதே போல் செங்கோட்டை காவல் நிலைய எல்கைகுட்பட்ட பகுதியில் கடந்த 2014 ஆம் ஆண்டு அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்ட செங்கோட்டை ராமசாமி தெருவை சேர்ந்த திருமலையாண்டி என்பவர் மகன் தடிசெல்வம் (47) மற்றும் செங்கோட்டை KC ரோடு குட்டியப்பா என்பவரின் மகன் சுரேஷ் (45) ஆகியோருக்கு செங்கோட்டை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சுனில் குமார் நான்கு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் ரூபாய் 23,000 தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.

 

மேற்படி வழக்குகளில் திறம்பட விசாரணை செய்து, சாட்சிகளை விரைவாக ஆஜர்படுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுத்த காவல் துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.அரவிந்த் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

 

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!