17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இரத்த சோகையால் பாதிக்கப்பட்ட வளர் இளம் பெண்களுக்கான ஊட்டச்சத்து வழங்கும் நிகழ்ச்சி.

இரத்த சோகையால் பாதிக்கப்பட்ட வளர் இளம் பெண்களுக்கான ஊட்டச்சத்து வழங்கும் நிகழ்ச்சி.

எழுதியவர்: mohan February 4, 2025, 1:26 pm

தஞ்சாவூர் மாவட்டம் ,பூதலூர் ஒன்றியம் ,பூதலூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் செல்லப்பன் பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் ரத்த சோகையால் பாதிக்கப்பட்ட வளர் இளம் பெண்களுக்கான ஊட்டச்சத்து வழங்கும் நிகழ்ச்சி சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்டின் சார்பாக நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு பூதலூர் பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் செல்லப்பன் பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் தலைமை தாங்கினர் .

பாளையப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவ அலுவலர் , செவிலியர் மற்றும் மருந்தாளுநர் ஆகியோர் கலந்து கொண்டனர் .இந்நிகழ்ச்சியில் இரண்டு அரசு மேல்நிலைப் பள்ளிகளையும் சேர்த்து 100க்கும் மேற்பட்ட ரத்தசோகை நோயினால் பாதிக்கப்பட்ட வளர் இளம் பெண்களுக்கு சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்டின் சார்பாக ஊட்டச்சத்து வழங்கப்பட்டது .இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் இன் தஞ்சாவூர் மாவட்ட நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அந்தோணி ராஜ் ஏற்பாடு செய்திருந்தார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!