17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » நேர்மை மிக்க ஆட்டோ ஓட்டுனருக்கு குவியும் பாராட்டு..

நேர்மை மிக்க ஆட்டோ ஓட்டுனருக்கு குவியும் பாராட்டு..

எழுதியவர்: Abubakker Sithik January 28, 2025, 11:09 pm

தென்காசி மாவட்டத்தில் சாலையில் கிடந்த பணத்தை காவல் நிலையம் சென்று ஒப்படைத்த நேர்மை குணமிக்க ஆட்டோ ஓட்டுனரை பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர். தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி ஸ்டேட் பேங்க் அருகே இன்று (28.01.2025) ரப்பர் சுற்றி சுருட்டி வைக்கப்பட்ட பணம் சாலையின் ஓரம் இருப்பதை கவனித்த அப்பகுதி ஆட்டோ ஓட்டுநர் செந்தில் முருகன் என்பவர் பணத்தை எடுத்து கண்ணியத்துடன் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். 

சிறிது நேரம் கழித்து பணத்தை தவறவிட்ட பரும்பு ஊரைச் சேர்ந்த ஈஸ்வர வேல் என்பவர் தனது பணத்தை ஸ்டேட் பேங்க் அருகே தொலைத்து விட்டதாகவும், தயவு கூர்ந்து கண்டுபிடித்து தரும் படியும் ஆழ்வார் குறிச்சி காவல் காவல் நிலையத்திற்கு வந்தடைந்தார். இது குறித்து சார்பு ஆய்வாளர் ஜெயக்குமார் உரிய விசாரணை மேற்கொண்டு மேற்படி சாலையில் தவறவிட்ட 5,600 ரூபாய் பணத்தை ஈஸ்வர வேலிடம் தகுந்த அறிவுரைகள் கூறி ஒப்படைக்கப்பட்டது.

சாலையில் கிடந்த பணத்தை உரிய முறையில் கண்ணியத்துடன் ஒப்படைத்த ஆழ்வார் குறிச்சியை சேர்ந்த சைலப்பன் என்பவரின் மகனான ஆட்டோ ஓட்டுநர் செந்தில் முருகன் என்பவரை சார்பு ஆய்வாளர் பாராட்டி பொன்னாடை அணிவித்து கௌரவித்தார். நேர்மை மிக்க ஆட்டோ ஓட்டுனர் செந்தில் முருகனை அப்பகுதி பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

 

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!