17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » வீரசிகாமணி அரசு பள்ளியில் நடந்த குடியரசு தின விழா..

வீரசிகாமணி அரசு பள்ளியில் நடந்த குடியரசு தின விழா..

எழுதியவர்: Abubakker Sithik January 28, 2025, 1:18 pm

தென்காசி மாவட்டம் வீரசிகாமணி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இந்தியாவின் 76-வது குடியரசு தின விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் பள்ளியின் தலைமையாசிரியர் க. தங்கராஜ், இந்தியாவின் மூவர்ண தேசிய கொடியேற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார். மேலும் பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது. வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் பரிசுகள் வழங்கி பாராட்டப்பட்டனர்.

குடியரசு தின நிகழ்ச்சியில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் கல்யாணி கலா, ஊராட்சி மன்ற உறுப்பினர் மீனா, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், ஊர் பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இறுதியில் ஆசிரியர் ப.கணேசன் நன்றி கூறினார்.

 

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!