17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லுாரியில் 153 மாணவர்கள் தேர்வு.!

முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லுாரியில் 153 மாணவர்கள் தேர்வு.!

எழுதியவர்: Baker BAker January 28, 2025, 11:12 am

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் ஒசுரில் அமைந்துள்ள பன்னாட்டு நிறுவனமான அசோக் லேலாண்ட் லிமிடெட் மற்றும் கல்லுாரியின் வேலைவாய்ப்பு பிரிவு சார்பாக 2025 ல் டிப்ளேமா முடிக்க இருக்கும் இயந்திரவில் துறை, மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை, மின்னணுவியல் மற்றும் தொடர்பியல்துறை மாணவர்களுக்கு வேலை அளிக்கும் விதத்தில் நேர்முகத் தேர்வு நடைபெற்றது.

துவக்க விழாவில் பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் அ.சேக்தாவுது தலைமையுரையாற்றி பேசுகையில் கடந்த 10 வருடமாக 100%வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்ததாகவும் இதுவரை 15,000 மேற்பட்ட மாணவர்கள் பல பன்னாட்டு நிறுவனங்களில் பணி அமர்த்தப்பட்டுள்ளதாவும் கூறினார்.

கல்லுாரியின் துணை முதல்வர், இயந்திரவியல் துறைத்தலைவர் மற்றும் வேலைவாய்ப்பு அதிகாரி முனைவர். ஜெ.கணேஷ்குமார் அனைவரையும் வரவேற்க மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறைத்தலைவர் பொ. பாலசுப்ரமணியன் வாழ்த்துரை வழங்கினார்

இந்த நேர்முகத் தேர்வில் ஒசுரில் அசோக் லேலாண்ட் லிமிடெட் நிறுவனத்துடன் கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி செய்த புரிந்துணர்வு ஒப்பந்தப்படி அசோக் லேலாண்ட் லிமிடெட் நிறுவனத்தின் துணை பொது மேலாளர் சங்கர் வளாக நேர்முகத் தேர்வினை நடத்தினார் இந்த நேர்முகத் தேர்வில் சுமார் 182 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த வேலைவாய்ப்பு முகாமில் 2025 ல் டிப்ளேமா முடிக்க இருக்கும் கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் சிவகங்கை, தூத்துக்குடி மாவட்டங்களிலுள்ள பாலிடெக்னிக் கல்லூரியிலிருந்து  இயந்திரவில் துறை, மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை, மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறையிலிருந்து மொத்தம் 153. மாணவர்கள் தேர்வுசெய்யப்பட்டனர்.

தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு மாதம் ரூபாய்.16,300/- ஊதியத்துடன் தங்க இடம், உணவு, சீருடை, பேருந்து போன்ற வசதிகள் செய்து தரப்படும் என்று நிறுவனத்தின் துணை பொது மேலாளர் சங்கர் தெரிவித்தார்.

நிறைவாக இயந்திரவியல் துறை ஆசிரியர் முனைவர் தே.சோமசுந்திரம் நன்றி கூறினார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!