17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » மாவட்ட செய்திகள் » செய்திகள் » திருச்சி மாநகராட்சி வளாகத்தில் டாக்டர்கள் செவிலியர்கள் 37 பேருக்கு பணி நியமன ஆணையை வழங்கிய அமைச்சர் நேரு.

திருச்சி மாநகராட்சி வளாகத்தில் டாக்டர்கள் செவிலியர்கள் 37 பேருக்கு பணி நியமன ஆணையை வழங்கிய அமைச்சர் நேரு.

எழுதியவர்: mohan January 24, 2025, 8:54 pm

திருச்சி மாநகராட்சியின் நகர்ப்புற நலவாழ்வு மையங்களில் காலியாக உள்ள 4 மருத்துவ அலுவலர்கள், 15 செவிலியர்கள் மற்றும் 7 மருத்துவ பணியாளர்கள் ஆகிய பணியிடங்களுக்கும், அரசு கி.ஆ.பெ. விசுவநாதம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் வகையில் 1 லேப் டெக்னிசியன், 1 அவசர சிகிச்சை உதவியாளர், 2 மருத்துவமனை உதவியாளர்களும் மேலும் இணை இயக்குநர் ஊரக நலப்பணிகள் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரியும் வகையில் 3 நுண் கதிர் வீச்சாளர், 3 மருத்துவமனை பணியாளர் மற்றும் 1 பாதுகாவலர் உள்ளிட்ட மாவட்ட சுகாதார சங்கம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 37 நபர்களுக்கு இன்று மாநகராட்சி அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப்குமார் தலைமையில் நடைபெற்ற விழாவில் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பணி உத்தரவினை வழங்கி சிறப்பாக பணியாற்ற வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையர் சரவணன், நகரப் பொறியாளர் சிவபாதம், மாநகர நல அலுவலர் விஜயசந்திரன், துணை ஆணையர் பாலு, மாநகராட்சி அலுவலர்கள், மருத்துவர்கள், மண்டல தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன், துர்கா தேவி,மாமன்ற உறுப்பினர்கள் முத்துச்செல்வம்,
மண்டி சேகர், கமால் முஸ்தபா,காஜாமலை விஜய் ,கவிதா செல்வம், ,மஞ்சுளா பாலசுப்பிரமணியன், முன்னாள் கவுன்சிலர் கிராப்பட்டி செல்வம் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

திருச்சி செய்தியாளர் H.பஷீர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!