17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி நீதிமன்ற வளாகத்தில் நேதாஜி பிறந்தநாள் விழா

உசிலம்பட்டி நீதிமன்ற வளாகத்தில் நேதாஜி பிறந்தநாள் விழா

எழுதியவர்: mohan January 23, 2025, 2:55 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நீதிமன்ற வளாகத்தில் நேதாஜி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு உசிலம்பட்டி வழக்கறிஞர் சங்கம் மற்றும் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கினர்.

இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் ராணுவ அமைத்தவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
128 வது பிறந்தநாள் விழாவில்
உசிலம்பட்டி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நேதாஜி திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து 128 வது பிறந்த நாளை முன்னிட்டு மரியாதை செலுத்தினர். அஇ பார்வர்ட் பிளாக் மாவட்ட செயலாளர் மணிகண்டன் தலைமையில் மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ரெட் காசிமாயன் மாநில நிர்வாகிகள் பாஸ்கர பாண்டியன் ராஜா மற்றும் மூத்த வழக்கறிஞர் கணேசன் மற்றும் வழக்கறிஞர்கள்
தினேஷ்குமார் தங்கபாண்டி ஆனந்த் மற்றும் உசிலம்பட்டி வழக்கறிஞர் சங்கத்தினர் கலந்து கொண்டனர். வழக்கறிஞர்களுக்கு மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

 

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!