17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தமிழக மீனவர்கள் விடுதலை மன்னார் நீதிமன்றம் உத்தரவு..

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தமிழக மீனவர்கள் விடுதலை மன்னார் நீதிமன்றம் உத்தரவு..

எழுதியவர்: ஆசிரியர் April 7, 2018, 7:04 pm

கடந்த மாதங்களில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட இராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த 19 மீனவர் வவுனியா சிறையில் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் வருகின்ற ஏப்ரல் மாதம் 14ம் தேதி சித்திரை முதல் நாளான தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இலங்கை வவுனியா சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 19 பேரை விடுதலை செய்ய இலங்கை சட்டமாம் அதிபர் தினை களத்தில் இருந்து பரிந்துரை கடிதம் இன்று தலைமன்னார் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதை அடுத்து வவுனியா சிறையில் இருந்து வந்த தமிழக மீனவர்களான இராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 19 பேரை மன்னார் நீதிமன்ற விடுதலை செய்து உத்தரவிட்டது.

இதனையடுத்து வவுனியா சிறையி லிருந்த 19 மீனவர்களும் இந்திய துனை தூதரக அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டனர். மேலும் யாழ்பாணம் சிறையிலுள்ள புதுக்கோட்டை மீனவர்கள் 8பேரும் இன்னும் ஒரு சில தினங்களுக்குள் விடுவிக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!