17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » தென்காசியில் பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கல்..

தென்காசியில் பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கல்..

எழுதியவர்: Abubakker Sithik January 14, 2025, 10:11 am

தென்காசி மாவட்ட தலைமை மருத்துவ மனையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் மகிழ்ச்சியுடன் பங்கேற்ற பல விதமான சிறப்பு விளையாட்டுப் போட்டிகள் மருத்துவ மனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின் தலைமையில் நடத்தப்பட்டது. இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பரிசுகளையும், தற்காலிக பணியாளர்களுக்கு மஞ்சள் பையில் பொங்கல் பரிசு தொகுப்பினையும் மருத்துவ மனை கண்காணிப்பாளர் டாக்டர் ஜெஸ்லின் வழங்கினார்.

மஞ்சள் பை பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் உறைவிட மருத்துவர் செல்வ பாலா, மருத்துவர்கள் மாரிமுத்து, ராஜலட்சுமி, விஜயகுமார், நிர்மல், பால கணேஷ், செவிலிய கண்காணிப் பாளர்கள், செவிலியர்கள், மருந்தாளுநர்கள், பணியாளர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.

மேலும், தென்காசி அரசு  தலைமை மருத்துவ மனை கண்காணிப்பாளர் டாக்டர் ஜெஸ்லின் தொடர்ந்து பல வருடங்களாக சமத்துவ பொங்கல் விழாவினை சிறப்பாக நடத்தி வருவதுடன், அனைத்து பணியாளர்களுக்கும் பொங்கல் தொகுப்பு தொடர்ந்து பல வருடங்களாக வழங்கி வருவதாக QPMS மேலாளர் ராமர் தெரிவித்தார். விழாவில் மருத்துவமனை கண்காணிப்பாளருக்கு QPMS ஒப்பந்த பணியாளர்கள், மேலாளர் ராமர் மற்றும் அனைவரின் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மருத்துவ மனை கண்காணிப்பாளர் டாக்டர் ஜெஸ்லின், அனைத்து பணியாளர்களின் சார்பாக, மருத்துவ மனை பணியாளர்கள் மற்றும் பொது மக்கள் அனைவருக்கும் பொங்கல் நல் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

 

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!