18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை முகமது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா.!

கீழக்கரை முகமது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா.!

எழுதியவர்: Baker BAker January 11, 2025, 8:02 pm

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முகமது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா முதல்வர் ஷேக் தாவூத் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கல்லூரியின் முன்னாள் பேராசிரியர் மரியதாஸ், வாலியா குரூப் ஆப் கம்பெனியின் நிர்வாக இயக்குநர், முன்னாள் மாணவர் ராஜாராம் பாண்டியன் , ரோட்டரி முன்னாள் துணை ஆளுநர் சண்முகராஜேஸ்வரன் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மின்னணுவியல் துறை தலைவர் பாலசுப்ரமணியன் வரவேற்புரை வழங்கினார்.

 அதனைத் தொடர்ந்து மாணவிகளுக்கு தமிழர் கலாச்சாரமான கபடி போட்டி , உறியடித்தல் போட்டி , கோலப் போட்டி, கயிறு இழுத்தல் போன்றவைகள் நடைபெற்று வெற்றி பெற்றவர்களுக்கு கல்லூரி முதல்வர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பரிசுகளை வழங்கினார்கள்.

கல்லூரி பேராசிரியர் கண்ணன் நன்றி கூறினார். முன்னாள் மாணவர்கள் ராம்குமார், வினோத் ராம், பாலகண்ணன், சதீஷ் ,சேது பாண்டியன் மற்றும் துணை முதல்வர், துறைத் தலைவர்கள், ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், மாணவ மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர். அனைத்து துறை தலைவர்கள், ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் ஏற்பாடுகளை செய்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!