17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி அருகே கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் பலி

உசிலம்பட்டி அருகே கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் பலி

எழுதியவர்: mohan January 8, 2025, 12:53 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி குப்பணம்பட்டியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகன் தஷ்விக்(4).யுகேசி படிக்கின்றான்.நேற்று மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பியவன் வீட்டின் அருகில் விளையாட்டிக் கொண்டிருந்தாக கூறப்படுகிறது.இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் பெற்றோர்கள் தேடிய போது வீட்டின் அருகிலுள்ள துரைராஜ் என்பவரின் கிணற்றில் பிணமாக கிடந்தது தெரிய வந்தது.இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் உசிலம்பட்டி தாலுகா போலிசாருக்கு தகவல் தெரிவித்தனர்.போலிசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் விரைந்து கிணற்றிலிருந்த சிறுவனின் உடலை மீட்டனர்.போலிசாரின் முதற்கட்ட விசாரணையில் சிறுவன் விளையாடிக் கொண்டிருந்த போது கிணற்றில் தவறி விழுந்து பலியாகி இருக்கலாம் என்பது தெரியவந்தது.இது குறித்து வழக்குப்பதிவு செய்த உசிலம்பட்டி தாலுகா போலிசார் சிறுவன் உடலை பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமணைக்கு அனுப்பி வைத்து விட்டு விசாரணை செய்து வருகின்றனர்.இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்ப்படுத்தி உள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!