18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » மாவட்ட செய்திகள் » செய்திகள் » டாஸ்மார்க் அகற்ற கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் மனு

டாஸ்மார்க் அகற்ற கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் மனு

எழுதியவர்: mohan January 6, 2025, 8:55 pm

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம்(AIYF )தஞ்சாவூர் மாநகர குழு சார்பில் தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் மனு ..

தஞ்சாவூர் மாநகராட்சி கீழவாசலில் இயங்கி வரும் டாஸ்மாக் (கடை எண் 7901 ) கடையினால் பெண்களும் ,பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் வணிக பெருமக்களும் போக்குவரத்து நெரிசலினால் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.

போக்குவரத்து நெரிசலை சரிசெய்யவும், டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் 11-09-2024 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பிரச்சனையின் தீவிரத்தை உணர்ந்து டாஸ்மாக் மாவட்ட நிர்வாகம் 11-09-2024 மதியம் 1 -00 மணியளவில் போராட்டம் நடத்தியவர்களை அழைத்து பேசி

30-11-2024 க்குள் இடமாற்றம் செய்து விடுவதாக டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அவர்கள் கையெழுத்திட்டு உத்திரவாதம் அளித்து எழுதி கொடுத்து உள்ளார்கள்.

ஆனால் (06-01-2025) வரை கடை மாற்றம் செய்வதற்கான எவ்விதமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை .மாவட்ட ஆட்சியர்  தலையிட்டுடாஸ்மாக் மது கடையை உடனடியாக இடம் மாற்றம் செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் ஆர். பி. முத்துக்குமரன் . மாநகரக்குழு உறுப்பினர் ஆ.தன்ராஜ் , அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் மாவட்ட பொருளாளர் உ.காதர்உசேன் , மாநகர செயலாளர் ஜெ.உமர் என்கிற காதர் உசேன் ஆகியோர் மனு அளித்தனர்.மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

செய்தி. . ஏ.கே.சுந்தர், தஞ்சாவூர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!