17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து தி.மு.க ஆர்ப்பாட்டம்..

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து தி.மு.க ஆர்ப்பாட்டம்..

எழுதியவர்: ஆசிரியர் April 2, 2018, 1:15 pm

இராமநாதபுரம் அரண்மனை முன்பு இன்று (02-04-2018 தி.மு.கட்சி சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் அதை இதுவரை நிறைவேற்றாத மத்திய பா.ஜ.க அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றன.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் திவாகரன் கண்டன உரையாற்றினார், அவரை தொடர்ந்து மத்திய அரசின் தமிழக மக்கள் விரோத போக்கை கண்டித்து கண்டன கோசம் எழுப்பினர்.

மேலும் ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இன்பாரகு, நகர் செயலாளர் கார்மேகம், குணசேகரன், ராஜா பிரபாகரன், மனோகரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!