17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » புளியரை சோதனை சாவடியில் மாவட்ட எஸ்.பி திடீர் ஆய்வு..

புளியரை சோதனை சாவடியில் மாவட்ட எஸ்.பி திடீர் ஆய்வு..

எழுதியவர்: Abubakker Sithik December 26, 2024, 3:19 pm

புளியரை சோதனைச் சாவடியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திடீரென ஆய்வு மேற்கொண்டார். தென்காசி மாவட்டம் புளியரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தமிழக-கேரள எல்லையான புளியரை சோதனை சாவடியில் தடை செய்யப்பட்ட பொருட்கள், கழிவு பொருட்கள் போன்றவை தென்காசி மாவட்டத்திற்குள் நுழைவதை தடுக்கும் விதமாக ஒரு காவல் ஆய்வாளர் தலைமையில், இரண்டு சார்பு ஆய்வாளர்கள், நான்கு காவல் ஆளினர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.R.ஶ்ரீனிவாசன் புளியரை சோதனை சாவடியில் இன்று (26.12.24) திடீர் ஆய்வு மேற்கொண்டு அங்கு வரும் வாகனங்களை சோதனை செய்து, பாதுகாப்பு பணியில் இருக்கும் காவல் துறையினருக்கு அறிவுரைகளை வழங்கினார். மேலும் தென்காசி மாவட்டத்திற்குள் தடை செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் கழிவுகளை ஏற்றி வரும் வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!