18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » சாலை விதிமுறையை பின்பற்றி பயணம் செய்த சார்பு ஆய்வாளர்; தென்காசி மாவட்ட எஸ்.பி பாராட்டு..

சாலை விதிமுறையை பின்பற்றி பயணம் செய்த சார்பு ஆய்வாளர்; தென்காசி மாவட்ட எஸ்.பி பாராட்டு..

எழுதியவர்: Abubakker Sithik December 26, 2024, 12:01 am

தென்காசி மாவட்டத்தில் சாலை விதிமுறையை பின்பற்றி இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த அச்சன்புதூர் சார்பு ஆய்வாளரை பாராட்டி பண வெகுமதிகளை தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.R.ஸ்ரீனிவாசன் வழங்கினார். தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் காலை வேளையில் சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிரே இருசக்கர வாகனத்தில் சீருடையில் முறையாக சாலை விதிமுறைகளை பின்பற்றி தலைக்கவசம் அணிந்த நிலையில் அச்சன்புதூர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சின்னத்துரை வந்து கொண்டிருந்தார். 

இதனை கண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.R.ஸ்ரீனிவாசன், சார்பு ஆய்வாளர் சின்னத்துரையை அழைத்து சாலை விதிமுறைகளை முறையாக பின்பற்றியதற்கு வாழ்த்து தெரிவித்து பண வெகுமதி வழங்கி பாராட்டினார். இதே போல் காவல் துறையினர் பணியில் இருந்தாலும், விடுமுறையில் இருந்தாலும் எப்போதும் முறையாக அனைத்து சாலை விதிமுறைகளையும் பின்பற்றி பாதுகாப்பான முறையில் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!