18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » பொதுமக்களை அச்சுறுத்தினால் கடும் நடவடிக்கை; தென்காசி மாவட்ட எஸ்.பி எச்சரிக்கை..

பொதுமக்களை அச்சுறுத்தினால் கடும் நடவடிக்கை; தென்காசி மாவட்ட எஸ்.பி எச்சரிக்கை..

எழுதியவர்: Abubakker Sithik December 25, 2024, 11:27 pm

தென்காசி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் விழா மற்றும் புத்தாண்டு தின கொண்டாட்டத்தின் போது பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் விதமாக பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பைக் ரேஸ் மற்றும் பைக் சாகசங்களில் ஈடுபடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட எஸ்.பி V.R.ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை விடுத்துள்ளார். தென்காசி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு கொண்டாட்டங்களின் போது இரவு நேரங்களில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகனங்களில் பைக் ரேஸ் செல்வது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. 

 

மேலும் அது போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்களை கைது செய்து அவர்களின் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு அவர்களது ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும். அதே போன்று சாலையில் செல்லும் பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் பைக்கில் சாகசம் செய்வது, அஜாக்கிரதையாகவும், அதி வேகமாகவும் செல்வதும், பொது இடங்களில் நின்று மது அருந்திவிட்டு பொதுமக்களின் அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் மற்றும் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.R ஶ்ரீனிவாசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!