18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » கீழக்கரையில் 27/12/2024 அன்று தொடங்கும் வர்த்தக கண்காட்சி (CENTENARY FAIR 2024)..

கீழக்கரையில் 27/12/2024 அன்று தொடங்கும் வர்த்தக கண்காட்சி (CENTENARY FAIR 2024)..

எழுதியவர்: ஆசிரியர் December 25, 2024, 9:50 pm

கீழக்கரையில் 27/12/2024 முதல் வர்த்தக கண்காட்சி ஹமீதியா மெட்ரிகுலேசன் பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது.

இக்கண்காட்சியில் கீழக்கரையின் பாரம்பரியம் மற்றும் சிறப்பை பறைசாற்றும் வகையில் கீழக்கரையின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு ஆற்றியவர்கள்,  சரித்திரம் சொல்லும் இராமநாதபுரம், கீழக்கரையும் வணிகமும், எங்கள் ஊரும் எங்கள் வாழ்வும், இறந்தும் இரந்த சீதக்காதி என்ற தலைப்புகளில் பேச்சு போட்டி, வினாடி வினா நிகழ்ச்சி, குறும்படம், வியாபார சிந்தனையை தூண்டும் SHARK TANK நிகழ்வு புகைப்பட போட்டி மற்றும் பல்வேறு அறிவு சார்ந்த மற்றும் பொழுது போக்கு நிகழ்ச்சிகள்  நடைபெற உள்ளது. இந்த போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு மற்றும் வேலைவாய்ப்புகளும் வழங்கப்படுகிறது.

மேலும் இந்த நிகழ்ச்சியில் கீழக்கரை மற்றும் வெளியூரை சார்ந்த பல்வேறு நிறுவனங்களின் கண்காட்சிகளும் நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் 7358203220 என்ற அலைபேசி அல்லது கீழே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ள QR Codeஐ ஸ்கேன் செய்யலாம்.

 

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!