18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தனியார் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா: சிக்கிய கடையின் உரிமையாளர்..!புண்ணிய ஸ்தலத்தில் நடந்த பரபரப்பு சம்பவம்…

தனியார் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா: சிக்கிய கடையின் உரிமையாளர்..!புண்ணிய ஸ்தலத்தில் நடந்த பரபரப்பு சம்பவம்…

எழுதியவர்: ஆசிரியர் December 25, 2024, 10:47 am

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உலகப் பிரசித்தி பெற்ற ராமேஸ்வரம் ராமநாதசாமி திருக்கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருவதுண்டு இவர்கள் அக்னி தீர்த்த கடற்கரையில் தீர்த்தம் மாறி விட்டு அதன் பின் கடற்கரை ஓரமுள்ள தனியார் குளியல் மற்றும் உடைமாற்றும் அறைகளில் உடைமாற்றிவிட்டு கோயிலுக்குள் தரிசனத்திற்காக கோவிலுக்கு செல்வது வழக்கம்.

இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு தந்தை, தாய், மகள் மற்றும் மகன் உட்பட நான்கு பேர் ராமேஸ்வரம் திருக்கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக நேற்று ராமேஸ்வரம் வந்தனர். இவர்கள் அக்கினி தீர்த்த கடற்கரையில் தீர்த்தம் குளித்துவிட்டு தனது குடும்பத்துடன் உடை மாற்றுவதற்காக லட்சுமி டீ ஸ்டால் உள்ள உடை மாற்றும் அறைக்கு ஒரு பெண் சென்றுள்ளார். அப்போது அந்த அறையில் கேமரா இருப்பதை பார்த்த அந்தப் பெண் கேமராவைப்பற்றி தனது தந்தையிடம் கூறியதை அடுத்து அருகில் இருந்த காவல்துறையிடம் புகார் அளித்தனர்.

அதன்பிறகு திருக்கோவில் காவல்துறையினர் கடையை சோதனை செய்யும் போது, உடைமாற்றும் அறையில் மூன்று ரகசிய கேமராக்கள் இருந்ததை கண்ட போலீசார் அந்த கேமராக்களை கைப்பற்றியுள்ளனர். இந்த கேமராக்கள் அனைத்தும் ஆன்லைன் மூலம் கடையின் உரிமையாளர் ராமேஸ்வரம் தம்பியான் கொள்ளையை சேர்ந்த ராஜேஷ் என்ற பெயரில் வாங்கியது தெரியவந்தது.

இதை அடுத்து கடையின் உரிமையாளர் ராஜேஷ் மற்றும் டீ மாஸ்டர் இருவரையும் கைது செய்த திருக்கோயில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!