17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » தென்காசி மாவட்ட நீதிமன்றங்களுக்கு துப்பாக்கி ஏந்திய காவல்துறை பாதுகாப்பு! மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு..

தென்காசி மாவட்ட நீதிமன்றங்களுக்கு துப்பாக்கி ஏந்திய காவல்துறை பாதுகாப்பு! மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு..

எழுதியவர்: Askar December 25, 2024, 8:37 am

தென்காசி மாவட்ட நீதிமன்றங்களுக்கு துப்பாக்கி ஏந்திய காவல்துறை பாதுகாப்பு!-மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு..

தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய காவல்துறையினரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்ற தமிழக காவல்துறை இயக்குனர்  உத்தரவின் பேரிலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.R.ஶ்ரீனிவாசன்  அறிவுறுத்தலின் பேரிலும் தென்காசி மாவட்டத்திலுள்ள தென்காசி ஒருங்கிணைந்த நீதிமன்றம், செங்கோட்டை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம், ஆலங்குளம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம், ஆலங்குளம் உரிமையியல் நீதிமன்றம், சிவகிரி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம், சங்கரன்கோவில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் ஆகிய நீதிமன்றங்களில் காவல் ஆய்வாளர்களின் தலைமையில், சார்பு ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளினர்கள் துப்பாக்கியுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  தென்காசி ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் காவல் துறையினருக்கு அறிவுரைகளை வழங்கினார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!