17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » தஞ்சை மாவட்டத்தில் கால்நடைகளுக்கு இலவச மாட்டு தீவனம் வழங்கும் நிகழ்ச்சி…

தஞ்சை மாவட்டத்தில் கால்நடைகளுக்கு இலவச மாட்டு தீவனம் வழங்கும் நிகழ்ச்சி…

எழுதியவர்: ஆசிரியர் December 24, 2024, 10:05 pm

தஞ்சாவூர் மாவட்டம் ,தஞ்சாவூர் ஒன்றியம், ஆலக்குடி கிராமத்தில் சில்ரன் சாரிட்டபிள் ட்ரஸ்டின் சார்பாக கால்நடை உரிமையாளர்களுக்கு இலவசமாக கால்நடை மாட்டு தீவனம் வழங்கப்பட்டது,

இந்நிகழ்ச்சிக்கு ஆலக்குடி கிராமத்தின் கால்நடை உதவி மருத்துவ அலுவலர் த சுகன்யா கலந்து கொண்டு பயனாளிகளுக்கு இலவச மாட்டுத்தீவனம் வழங்கினார் .

இந்நிகழ்ச்சியில் ஆலக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மாட்டுத் தீவனம் வாங்கி சென்றனர் .

கால்நடை உரிமையாளர்களுக்கு கால்நடை மாட்டு தீவனம் வழங்கும் நிகழ்ச்சியை சில்ரன் சாரிட்டபிள் டிரஸ்டின் சார்பாக மாவட்ட நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அந்தோணி ராஜ் ஏற்பாடு செய்திருந்தார்.

செய்தி ஏ.கே.சுந்தர், தஞ்சாவூர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!