17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » சட்டென குறைந்த தங்கம் விலை! இன்றைய நிலவரம் என்ன.?

சட்டென குறைந்த தங்கம் விலை! இன்றைய நிலவரம் என்ன.?

எழுதியவர்: Askar December 24, 2024, 10:32 am

 தங்கம் விலை ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. இதனிடையே, இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே நிலவிய போர் காரணமாக உச்சத்தை எட்டியது. அவ்வப்போது சற்று சரிந்து வந்த தங்கம் விலை கடந்த மார்ச் மாதம் தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது.

இந்த நிலையில், இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. கடந்த சில வாரங்களாக தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டி வரும் சூழலில், இன்று சற்று குறைந்திருப்பது நகைப் பிரியர்கள் மற்றும் இல்லத்தரசிகளுக்கு நல்ல செய்தியாக அமைந்துள்ளது.

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ. 56,720 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ. 10 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ. 7,090 -க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 7,735-க்கும், ஒரு சவரன் ரூ. 61,880-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் வெள்ளி ரூ. 98-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ. 98,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!