17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » மாவட்ட செய்திகள் » செய்திகள் » உசிலம்பட்டியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இலவச சீருடை வழங்கும் நிகழ்ச்சி

உசிலம்பட்டியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இலவச சீருடை வழங்கும் நிகழ்ச்சி

எழுதியவர்: mohan December 22, 2024, 2:28 pm

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா தமிழகமெங்கும் திமுக கட்சியினரால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது.இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது. மதுரை தெற்கு மாவட்டம் உசிலம்பட்டி தி மு க நகர் கழகம் சார்பில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு உசிலம்பட்டி பகுதியிலுள்ள 25 ஆட்டோ தொழிற்சங்கத்தில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இலவச காக்கி சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் தலைமையேற்று கலந்து கொண்ட உசிலம்பட்டி திமுக நகரச்செயலாளர் எஸ்ஒஆர்.தங்கப்பாண்டியன் ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இலவச சீருடை வழங்கினார்.இவ்விழாவில் நகர அவைத்தலைவர் சி எம் பி சின்னன் வரவேற்றார். உசிலம்பட்டி நகரச் செயலாளர் எஸ் ஓ ஆர் தங்கப்பாண்டியன் தொகுதிப் பொறுப்பாளர் பி செல்லத்துரை மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ஜி பி ராஜா உசிலம்பட்டி ஒன்றிய செயலாளர்கள் எஸ் வி எஸ் முருகன் எம் பி பழனி அஜித் பாண்டி செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் டி முத்துராமன் சேடப்பட்டி ஒன்றிய செயலாளர் செல்வ பிரகாஷ் ஏழுமலை பேரூர் செயலாளர் ஆர் பி ஜெயராமன் பொதுக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் பி. சரவணகுமார் மாநில சுற்றுச்சூழல் அணி எம் ஆர் அருண் மாவட்ட துணைச் செயலாளர் சிவனாண்டி மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு அணி வி. குபேந்திரன் மாவட்ட விவசாய அணி பி டி மோகன் முன்னாள் நகரச் செயலாளர் எஸ் தங்கமலை பாண்டி முன்னாள் ஒன்றிய செயலாளர் க. மூக்கையா மாவட்ட நிர்வாகிகள் சரவெடி சரவணன் வி கல்யாணி டி சி கணேசன் வாலாந்தூர் டி.பார்த்திபன் ஊராட்சி ஒன்றிய தலைவர் ரஞ்சனி சுதந்திரம் நகர நிர்வாகிகள் எம் உதய பாஸ்கரன் தேவி ரமேஷ் அழகர் மாவட்ட பிரதிநிதிகள் பழனி குமார் மகாலிங்கம் தினேஷ் நகராட்சி கவுன்சிலர்கள் முருகன் வீரமணி செல்வி சோபனா தேவி நாகஜோதி பிரியா காத்தம்மாள் சுபாகரன் சந்தானம் மாவட்டத் துணை அமைப்பாளர்கள் வினோத் குமார் வழக்கறிஞர்கள் கனிராஜன் விக்னேஷ் மற்றும் வார்டு செயலாளர்கள் மதிவாணன் மணிகண்டன் பால்பாண்டி பிரபாகரன் மணிமாறன் சிதம்பரம் பால்பாண்டி முருகன் நவநீதகிருஷ்ணன் காட்டு ராஜா முருகன் பழனியம்மாள் சுரேஷ் ஜெயக்கொடி பாண்டியன் கர்ணன் ராஜகுரு மற்றும் திமுக நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர் நகர பொருளாளர் து. கா ஜெயபிரகாஷ் நன்றி கூறினார்.

உசிலை மோகன்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!