17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து இந்தியா கூட்டணி கட்சி எம்பிக்கள் போராட்டம்..

ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து இந்தியா கூட்டணி கட்சி எம்பிக்கள் போராட்டம்..

எழுதியவர்: Abubakker Sithik December 19, 2024, 4:19 pm

ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து இந்தியா கூட்டணி கட்சி எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்றத்தில் அம்பேத்கரை அவமதிக்கும் கருத்துகளை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்திருந்த நிலையில், இந்தியா கூட்டணி தலைவர்கள் அவரின் கருத்துக்கு கடும் கண்டனத்தைப் பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலை முன்பு இந்தியா கூட்டணி கட்சி எம்பிக்கள் ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி, காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி, ஜோதி மணி உள்ளிட்ட எம்பிக்கள் நீல நிற ஆடை அணிந்து போராட்டத்தில் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினர். உள்துறை அமைச்சர் பதவியில் இருந்து உடனடியாக அமித்ஷா விலக வேண்டும் என்றும், அம்பேத்கர் குறித்து தவறான கருத்து தெரிவித்ததிற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் எம்பிக்கள் முழக்கமிட்டனர். தொடர்ந்து, அம்பேத்கர் சிலையில் இருந்து மகர் திவார் வரை எதிர்க்கட்சி எம்பிக்கள் பேரணியாக சென்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!