17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » இன்று உருவாகுது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! கடலோர மாவட்டங்களில் நாளை மற்றும் மறுநாள் கனமழைக்கு வாய்ப்பு..

இன்று உருவாகுது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! கடலோர மாவட்டங்களில் நாளை மற்றும் மறுநாள் கனமழைக்கு வாய்ப்பு..

எழுதியவர்: Askar December 15, 2024, 7:58 am

வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக வடதமிழகம், தென் தமிழகம், டெல்டா மாவட்டங்களில் பரவலாக கனமழை காணப்பட்டது. குறிப்பாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய தென்மாவட்டங்களில் மிக கனமழை கொட்டித் தீர்த்தது. இந்த நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது, மேலும் வலுப்பெற்று மேற்கு – வடமேற்கு திசையில் தமிழக கடலோரப்பகுதிகளை நோக்கி, அதற்கடுத்த 2 நாட்களில் நகரும். இதன்காரணமாக, நாளை (திங்கட்கிழமை) ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழைக்கு வாய்ப்புகள் உள்ளது. தொடர்ந்து 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!