18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » தேசிய மக்கள் மன்றத்தில்  999 வழக்குகளுக்கு ரூ.7,80,30,350 தீர்வுத்தொகை..

தேசிய மக்கள் மன்றத்தில்  999 வழக்குகளுக்கு ரூ.7,80,30,350 தீர்வுத்தொகை..

எழுதியவர்: ஆசிரியர் December 14, 2024, 5:36 pm

இராமநாதபுரம் : தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் இன்று நடைபெற்றது. தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு, மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்திரவின்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று நடந்த மக்கள் நீதிமன்றத்தில் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி, A.K.மெஹ்பூப் அலிகான் தலைமை வகித்தார், விரைவு மகிளா நீதிமன்ற நீதிபதி K.கவிதா, தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் C.மோகன்ராம், சார்பு நீதிபதி M. அகிலா தேவி. சார்புநீதிபதி S. பிரசாத், நீதித்துறை நடுவர் எண்-1 N.நிலவேஸ்வரன், நீதித்துறை நடுவர் எண்-II G.பிரபாகரன், கூடுதல் மகிளா நீதிபதி E.வெர்ஜின் வெஸ்டா, ராமநாதபுரம் வழக்கறிஞர் சங்கதலைவர் S.J ஷேக் இப்ராஹிம் மற்றும் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். ராமநாதபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் மாவட்ட நீதிமன்ற வளாகம், பரமக்குடி, முதுகுளத்தூர், கமுதி, கடலாடி, திருவாடானை, ராமேஸ்வரம் ஆகிய நீதிமன்றங்களில் 10 அமர்வுகள் ஏற்படுத்தப்பட்டு நிலுவையில் உள்ள சிவில், கிரிமினல், வாகன விபத்து, காசோலை விவகாரம் தொடர்பான வழக்குகள், வங்கி வராக்கடன்கள், சிறு வழக்குகள் உட்பட 3,468 வழக்குகள் பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்பட்டன. இதில் தீர்வு காணப்பட்ட 999 வழக்குகளுக்கு ரூ.7,80,30,350 நிவாரண தொகை வழங்கப்பட்டது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!