ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்கானிப்பாளர் சந்தீஷ் இ.கா.ப உத்தரவுபடி திருப்பாலைக்குடி காவல் சரகத்தில் தீவிர வாகன சோதனை இரவு முழுவதும் நடை பெற்றது. அப்போது தனிப்பிரிவு தலைமை காவலர் சந்திர சேகருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து சார்பு ஆய்வாளர் அர்சுன கோபால் சிறப்பு சார்பு ஆய்வாளர் ஜெயபிரகாஷ் தலைமை காவலர்கள், சரவணகுமார், சரவனன் முதல்நிலைகாவலர் சிக்கந்தர், காவலர்கள் செல்வகுமார், சுரேஷ் ஆகீயோர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்பொழுது காலை 3.45 மணி அளவில் கோட்டை கறை ஆற்றில் மணல் ஏற்றி வந்த டிராக்டர் டிரைவர் காவல்துறையை கண்டதும் தப்பி ஒடி சென்றார். டிராக்டரை பறிமுதல்செய்து திருப்பாலைக்குடி காவல்நிலையம் கொண்டு வந்த காவல்துறையினர் தப்பியோடிய குற்றவாளியை வலை வீசி தேடி வருகின்றனர்.
இராமநாதபுர மாவட்டத்தில் மணல் கொள்ளை தடுக்க இரவு பகலாக தீவிர சோதனை..
எழுதியவர்: ஆசிரியர் December 14, 2024, 2:55 pm




You must be logged in to post a comment.