17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » இரவு முழுவதும் சிறையில் இருந்த நடிகர் அல்லு அர்ஜூன்! தற்போது ரிலீஸ் ஆனார்..

இரவு முழுவதும் சிறையில் இருந்த நடிகர் அல்லு அர்ஜூன்! தற்போது ரிலீஸ் ஆனார்..

எழுதியவர்: Askar December 14, 2024, 9:46 am

கூட்ட நெரிசலில் சிக்கி ரசிகை பலியான விவகாரத்தில் தெலங்கானா உயா்நீதிமன்றம் வழங்கிய இடைக்கால ஜாமீனின் ஆவணங்கள் முழுமையாக கிடைக்காத நிலையில், வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் சிறையிலேயே கழித்த நடிகர் அல்லு அர்ஜுன் தற்போது சிறையிலிருந்து வெளியே வந்தார்.

நடிகா் அல்லு அா்ஜுன் நடித்த புஷ்பா-2 திரைப்படம் கடந்த 5-ஆம் தேதி வெளியானது. அதற்கு முந்தைய நாள் இரவே ஹைதராபாதில் உள்ள திரையரங்கில் இத்திரைப்படத்தின் சிறப்புக் காட்சி வெளியானது. இதனால், திரையரங்கில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

அப்போது, திரைப்படத்தில் நடித்த அல்லு அா்ஜுன் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி தனியாா் பாதுகாவலா்கள் புடைசூழ அந்த திரையரங்குக்கு வந்தனா்.

அவரைப் பாா்க்க ரசிகா்கள் முண்டியடித்துக் கொண்டு சென்றனா். அப்போது அல்லு அா்ஜுனுடன் வந்த பாதுகாவலா்கள் ரசிகா்களைப் பிடித்து தள்ளினா். இதனால் அப்பகுதியில் கடுமையான தள்ளமுள்ளு ஏற்பட்டது. திரையரங்கின் பிரதான இரும்பு கேட் சரிந்து, ஏராளமானோா் கீழே விழுந்தனா். பலா் நெரிசலில் சிக்கினா்.

இந்த நெரிசலில் 35 வயது பெண் உயிரிழந்தனா். அவரின் 9 வயது மகன் படுகாயமடைந்தாா். சிறுவனின் தந்தை லேசான காயத்துடன் தப்பினாா்.

போலீஸாா் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனா். திரையரங்க நிா்வாகத்தினா் உரிய முன்னேற்பாடுகளைச் செய்யவில்லை என்றும், நடிகா் அல்லு அா்ஜுன் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி வந்ததால் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது என்றும் காவல்துறையினா் தெரிவித்தனா்.

இந்த சம்பவம் தொடா்பாக நடிகா் அல்லு அா்ஜுன், அவருடைய பாதுகாவலா்கள், திரையங்கு நிா்வாகம் மீது உள்ளிட்டோா் மீது காவல் துறையினா் பாரதிய நியாய சன்ஹிதா சட்டப் பிரிவு 105 மற்றும் 118 (1)-இன் கீழ் வழக்குப் பதிவு செய்தனா். தொடா்ந்து திரையரங்க உரிமையாளா், மேலாளா், ஊழியா் என மூவரை காவல் துறையினா் கைது செய்தனா்.

அதே நேரத்தில், உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் அளிப்பதாக அல்லு அா்ஜுன் அறிவித்தாா். மேலும், நெரிசலில் பெண் உயிரிழந்த விவகாரத்தில் தன் மீது காவல் துறையினா் பதிவு செய்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று தெலங்கானா உயா்நீதிமன்றத்தில் கடந்த புதன்கிழமை மனு தாக்கல் செய்தாா்.

இந்த நிலையில், ஹைதராபாதில் உள்ள அல்லு அா்ஜுன் இல்லத்துக்கு வெள்ளிக்கிழமை(டிச.13) சென்ற காவல் துறையினா் விசாரணைக்காக அவரை பலத்த பாதுகாப்புடன் காவல் துறை வாகனத்தில் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா். அங்கு அவரைக் கைது செய்வதாக காவல் துறையினா் முறைப்படி அறிவித்தனா்.

பின்னா், விசாரணை நீதிமன்றத்தில் அவா் ஆஜா்படுத்தப்பட்டாா். அவரை 14 நாள்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டாா். இதையடுத்து, தெலங்கானாவிலுள்ள சஞ்சல்குடா பகுதியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனிடையே, அல்லு அா்ஜுக்கு ஜாமீன் கோரி, தெலங்கானா உயா்நீதிமன்றத்தில் அவரது தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதையேற்று, விசாரணைக்கு உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என நிபந்தனைகளுடன் கூடிய இடைக்கால ஜாமீன் வழங்கியது உயா்நீதிமன்றம்.

இருப்பினும், முறையான ஜாமீன் ஆவணங்கள் கிடைக்காததால் சஞ்சல்குடா சிறை அதிகாரிகள் அவரை உடனடியாக வெளியே அனுப்ப மறுத்துவிட்டனர். இதனால், வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் அவர் சிறையிலேயே கழிக்க நேரிட்டது.

அவர் கைது செய்யப்பட்ட செய்தி பரவியதும் சஞ்சல்குடா சிறையை சுற்றிலும் அல்லு அர்ஜுனின் ரசிகர்கள் ஆயிரக்கணக்கானோர் குவிந்து அவருக்கு ஆதரவாக முழக்கங்கள் எழுப்பி வந்தனர். இதனால், கூடுதல் போலீஸ் வரவழைக்கப்பட்டு சிறையை சுற்றியும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

இந்நிலையில், இடைக்கால ஜாமீனில் விடுவிக்கப்பட்ட நடிகர் அல்லு அர்ஜுன் சனிக்கிழமை காலை(டிச.14) 7 மணியளவில் சிறையிலிருந்து வெளியே வந்தார்.

சாட்சிகளைக் கலைக்கக் கூடாது, விசாரணைக்கு உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் போன்ற நிபந்தனைகளோடு அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!