18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » புஷ்பானா ஃப்ளவர் இல்லடா ஃபயர்! நடிகர் அல்லு அர்ஜூன் அதிரடி கைது..

புஷ்பானா ஃப்ளவர் இல்லடா ஃபயர்! நடிகர் அல்லு அர்ஜூன் அதிரடி கைது..

எழுதியவர்: Askar December 13, 2024, 6:13 pm

நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்ட நிலையில், அவருக்கு 14 நாள் நீதிமன்றக் காவல் அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த 4-ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் ‘புஷ்பா 2’ திரைப்படத்தின் சிறப்புக் காட்சியைக் கண்டுகளிக்கச் சென்ற கவிதா (35) அங்கே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். மேலும், கூட்ட நெரிசலில் சிக்கிய அவரது 8 வயது மகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தநிலையில், அல்லு அர்ஜுன் மீது 105, 118 (1) என்ற பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்த காவல்துறையினர், அவரை வெள்ளிக்கிழமை (டிச. 13) கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து, அவருக்கு 14 நாள் நீதிமன்றக் காவல் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் ஏற்கனவே திரையரங்க உரிமையாளர், மேலாளர் உள்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த பெண் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் அளிப்பதாக அல்லு அர்ஜுன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!