இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியம், அக்காள்மடம் தொடக்கப்பள்ளி இல்லம் தேடிக் கல்வி மையத்தில் மகாகவி பாரதி பிறந்த தின விழா இன்று நடந்தது. பள்ளி தலைமையாசிரியை பெட்ரீசியா தலைமை வகித்தார். ஆசிரியை அமுதா வரவேற்றார். இல்லம் தேடிக் கல்வி மாவட்ட ஆசிரிய ஒருங்கிணைப்பாளர் லியோன் வாழ்த்துரை வழங்கினார். பாரதியின் வாழ்க்கை வரலாற்றிலிருந்து வினாக்கள் கேட்டு பதில் கூறிய மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. மாணவர்கள் பாரதி முகமூடி அணிந்து இருந்தனர். இனிப்பு வழங்கப்பட்டது. இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர் சுகந்தி நன்றி கூறினார். ஆசிரியைகள் அமுதா, கிறிஸ்டி இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர் சுகந்தி ஏற்பாடு செய்தனர்.
இல்லம் தேடிக் கல்வி மையத்தில் மகாகவி பாரதி பிறந்த தின விழா..
எழுதியவர்: ஆசிரியர் December 11, 2024, 6:41 pm




You must be logged in to post a comment.