18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் பிறந்த நாளை முன்னிட்டு பழனி கோவிலில் அதிமுகவினர் தங்கத்தேர் இழுத்து வழிபாடு..

முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் பிறந்த நாளை முன்னிட்டு பழனி கோவிலில் அதிமுகவினர் தங்கத்தேர் இழுத்து வழிபாடு..

எழுதியவர்: Askar December 10, 2024, 8:03 pm

முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் பிறந்த நாளை முன்னிட்டு பழனி கோவிலில் அதிமுகவினர் தங்கத்தேர் இழுத்து வழிபாடு..

அதிமுக கழக துணை பொதுசெயலாளரும் ,திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும் ,நத்தம் சட்டமன்ற உறுப்பினருமான நத்தம் விசுவநாதன்  75 வது பிறந்த நாளை முன்னிட்டு பழனி பெரியம்மா பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சதிஷ்குமார் தலைமையில் , மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் அசோக் முன்னிலையில் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு செய்தும் தங்கத்தேர் எடுத்து வழிபட்டனர். இந்நிகழ்ச்சியில் எஸ்.கே பாபு மாவட்ட பிரதிநிதி ,பாலமுருகன் அமைப்பு சாரா ஓட்டுனர் அணி பொருளாளர் ,சுப்பிரமணிய பாரதி 19வது வார்டு கழகச் செயலாளர், கருப்புசாமி மாவட்ட பிரதிநிதி, குகன் மாவட்ட தகவல் தொழில்நுட்ப மாவட்ட துணைத் தலைவர் ,சுப்பிரமணி நகர அம்மா பேரவை தலைவர் ,செந்தில் அரசு நகர மாணவரணி இணைச் செயலாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!