18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாவட்ட செய்திகள் » அறிவியல் புத்தாக்க போட்டியில் பரிசு குவித்த ராமநாதபுரம் மாணவர்களுக்கு  மாவட்ட ஆட்சியர் பாராட்டு..

அறிவியல் புத்தாக்க போட்டியில் பரிசு குவித்த ராமநாதபுரம் மாணவர்களுக்கு  மாவட்ட ஆட்சியர் பாராட்டு..

எழுதியவர்: ஆசிரியர் December 9, 2024, 7:16 pm

இராமநாதபுரம் :  தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் தொழில் முனைவோர் மேம்பாடு புத்தாக்க மேம்பாட்டு திட்டம் 2.0 சார்பில் மாநில அளவிலான அறிவியல் கண்டுபிடிப்பு போட்டியில் ராமநாதபுரம் மீன்வள தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் ராமகோபால்,  வேல்முருகன், செல்வகணேஷ் ஆகியோர் கேபிள் கிளைடு வே எனும் புதிய தொழில்நுட்ப சாதனம் கண்டுபிடித்து ரூ 1 லட்சம் பரிசுத்தொகை வென்றனர். இந்த மாணவர் 3 பேரையும், அரிய கண்டுபிடிப்பிற்கு வழிகாட்டிகளாக திகழ்ந்த சிவசுடலைமணி, பொன் வேல்முருகன் ஆகியோரை மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜித் சிங் காலோன் இன்று பாராட்டினார். மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, முதன்மை கல்வி அலுவலர் சின்னராசு, தனித்துணை ஆட்சியர் தனலட்சுமி, மாவட்ட வழங்கல் அலுவலர் இளங்கோ, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் பாலசுந்தரம் உடனிருந்தனர்.

.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!