இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வடக்கு மீன்பிடி துறைமுகத்திலிருந்து 300 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நேற்று காலை தொழிலுக்குச் சென்றனர். இலங்கை யாழ். மாவட்டம் நெடுந்தீவு கடற்பரப்பில் நேற்று நள்ளிரவு மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக மண்டபம் கார்த்திக் ராஜா, தங்கச்சிமடம் ஆஸ்டின் ஆகியோரது விசைப்படகுகளில் இருந்த சேசு 47, காளி 50, கண்ணன் 55, முத்துராஜ் 45, பத்தரப்பன் 55 உள்பட 8 மீனவர்களை கைது செய்து யாழ்ப்பாணம் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றனர். பிடிபட்ட மீனவர்களிடம் முதல்கட்ட விசாரணை, மருத்துவ பரிசோதனைக்கு பின் யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் 8 மீனவர்களை படகுகளுடன் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்தில் ஒப்படைக்கப்பட உள்ளதாக இலங்கை கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மண்டபம் மீனவர் 8 பேர் 2 விசைப்படகு களுடன் கைது:இலங்கை கடற்படை நடவடிக்கை..
எழுதியவர்: ஆசிரியர் December 8, 2024, 10:49 am




You must be logged in to post a comment.