18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » வலையில் சிக்கிய அரிய வகை நட்சத்திர ஆமை:கடலில் பத்திரமாக விட்ட மீனவர்கள்..!

வலையில் சிக்கிய அரிய வகை நட்சத்திர ஆமை:கடலில் பத்திரமாக விட்ட மீனவர்கள்..!

எழுதியவர்: ஆசிரியர் December 7, 2024, 12:27 am

தொண்டி கடலில் சிக்கிய அரிய வகை நட்சத்திர ஆமையை, மீட்டு மீண்டும் பத்திரமாக கடலில் விட்ட மீனவர்களுக்கு பாராட்டு குவிகிறது.

ராமநாதபுரம் மாவட்டம்,தொண்டி புதுக் குடியை சேர்ந்த மீனவர் ராமகிருஷ்ணன், பாலமுருகன், மணிகண்டன் ஆகியோர் தொண்டி புதுக்குடி கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது, அவர்களது வலையில் 15 கிலோ எடை கொண்ட அதிசய நட்சத்திர ஆமை ஒன்று சிக்கியது.

உடன் அதை பத்திரமாக  வலையில் இருந்து எடுத்து  உயிருடன் கடலில் மீண்டும் விட்டனர். தடை செய்யப்பட்ட கடல் ஆமையை பத்திரமாக மீட்ட மீனவர்களுக்கு பாராட்டு தெரிவித்ததுடன் மாவட்ட நிர்வாகம் சார்பில் சன்மானம் வழங்கப்படும் என கடலோர காவல்துறையினர் தெரிவித்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!