18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » திருப்புல்லாணி அருகே 705 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்:3 பேர் கைது..

திருப்புல்லாணி அருகே 705 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்:3 பேர் கைது..

எழுதியவர்: ஆசிரியர் December 3, 2024, 2:45 pm

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே தினைக்குளம் அருகே அத்தியட்சபுரம். பகுதியில் திருப்புல்லாணி போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 705 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தன. தமிழக அரசு தடை செய்த அப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக பெரியப்பட்டினத்தைச் சேர்ந்த செய்யது இப்ராஹிம் 42, செய்யது ஜமால் 38, சரக்கு வாகன டிரைவர் சேலத்தைச் சேர்ந்த ராஜா(39) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!