17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கனமழை! தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரி விடுமுறை.?

கனமழை! தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரி விடுமுறை.?

எழுதியவர்: Askar December 3, 2024, 9:38 am

கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் இன்று (டிச., 03) பள்ளிகளுக்கு மாவட்ட நிர்வாகம் விடுமுறை அளித்தது.

தமிழகத்தில் பெஞ்சல் புயலால் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை உள்ளிட்ட பல மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. விளைநிலங்கள், சாலைகள், குடியிருப்புகள் என பெரும்பாலான பகுதிகளில் வெள்ளநீரால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டு உள்ள மக்கள் நிவாரண முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில், இன்று (டிச.3.,) பல்வேறு மாவட்டங்களில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன் விவரம் வருமாறு:

ராணிப்பேட்டையில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை என மாவட்ட கலெக்டர் சந்திரகலா அறிவித்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் இன்று (டிச., 03) பள்ளிகளுக்கு மாவட்ட நிர்வாகம் விடுமுறை அளித்தது.

 விழுப்புரம், கடலூர் மாவட்ட பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சேலம், திருவண்ணாமலையில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை, போச்சம்பள்ளி ஆகிய தாலுகாக்களுக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டு உள்ளது. பெஞ்சல் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ள புதுச்சேரியில் இன்று (டிச.3) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!