17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மள மளவென குறைந்து வரும் தங்கம் விலை! மகிழ்ச்சியில் நடுத்தர மக்கள்..

மள மளவென குறைந்து வரும் தங்கம் விலை! மகிழ்ச்சியில் நடுத்தர மக்கள்..

எழுதியவர்: Askar November 26, 2024, 10:47 am

இந்தியாவில் தங்கம் விலை ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக இருந்து வருகிறது.

குறிப்பாக இந்தாண்டு இஸ்ரேல் – பாலஸ்தீனப் போர், அமெரிக்க அதிபர் தேர்தல் காரணமாக தங்கம் விலை வரலாறு காணாத உச்சம் தொட்டது.

கிட்டதிட்ட சவரன் ரூ.60,000-ஐ நெருங்கியது. இந்நிலையில் கடந்த வாரம் தங்கம் விலை சற்று குறைந்து ரூ.55,000 வரை விற்பனை ஆனது. இந்நிலையில் கடந்த வாரம் திடீரென விலை கடுமையாக உயர்ந்தது. 5 நாளில் ரூ.2,320 அதிகரித்தது.

இந்தநிலையில் இன்று மீண்டும் ஆபரணத் தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது. இதனால் மக்கள் சற்று மகிழ்ச்சி தெரிவித்தனர்.

இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.120 குறைந்து ரூ.7,080 க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.960 குறைந்து ரூ.56,640 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!