17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » சர சரவென குறைந்த ஆபரணத் தங்கம்; இன்று சர்ரென்று எகிறியது..

சர சரவென குறைந்த ஆபரணத் தங்கம்; இன்று சர்ரென்று எகிறியது..

எழுதியவர்: Askar November 18, 2024, 10:32 am

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ.6,995-க்கும், சவரன் ரூ.55,960க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச பொருளாதார சூழலுக்கு ஏற்ப, இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு விற்பனையாகி வருகிறது. ஆனால் கடந்த செப்டம்பரில் நாளுக்கு நாள் அதிகரித்த தங்கம் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து, ரூ.60 ஆயிரத்தை நெருங்கியது. இப்படியே சென்றால் ஒரு கிராமாவது வாங்க இயலுமா என மக்கள் எண்ணிய நிலையில், எந்த அளவுக்கு உயர்ந்ததோ அதே அளவிற்கு இம்மாதத் தொடக்கத்தில் இருந்து விலை சரியத் தொடங்கியது.

சென்னையில் நேற்றுமுன் தினம் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ. 55,480 -க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.6,935-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 60 உயர்ந்து ரூ. 6,995க்கும், சவரனுக்கு ரூ. 480க்கும் உயர்ந்து ரூ.55,960 க்கு விற்பனை செய்யப்பட்டுகிறது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!