17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » ஆடுபுலி ஆட்டம் ஆடும் தங்கம்; நேற்று கூடிய விலை இன்று சரிவு..

ஆடுபுலி ஆட்டம் ஆடும் தங்கம்; நேற்று கூடிய விலை இன்று சரிவு..

எழுதியவர்: Askar November 16, 2024, 10:27 am

சென்னையில் நேற்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 அதிகரித்த நிலையில், இன்று (நவ.,16) ரூ.80 குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ.6,935க்கும், ஒரு சவரன் ரூ.55,480க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை கடந்த சில மாதங்களாக அதிரடியாக உயர்வதும், குறைவதுமாக இருந்து வந்தது. தமிழகத்தில் நேற்று முன்தினம் (நவ.,14) , 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 6,935 ரூபாய்க்கும்; சவரன், 55,480 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 99 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

நேற்று (நவ.,15) தங்கம் விலை கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து, 6,945 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 80 ரூபாய் அதிகரித்து, 55,560 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்நிலையில் இன்று (நவ.,16) சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ.6,935க்கும், ஒரு சவரன் ரூ.55,480க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!