17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » பராமரிப்பு பணி காரணமாக கடற்கரை – தாம்பரம் ரயில்கள் நாளை ரத்து: தெற்கு ரயில்வே தகவல்..

பராமரிப்பு பணி காரணமாக கடற்கரை – தாம்பரம் ரயில்கள் நாளை ரத்து: தெற்கு ரயில்வே தகவல்..

எழுதியவர்: Askar November 16, 2024, 10:07 am

பராமரிப்பு பணி காரணமாக கடற்கரை – தாம்பரம் ரயில்கள் நாளை ரத்து: தெற்கு ரயில்வே தகவல்..

சென்னை: பராமரிப்பு பணி காரணமாக சென்னை கடற்கரை – தாம்பரம் புறநகர் ரயில்கள் நாளை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: தாம்பரம் யார்டில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை (17ம் தேதி) காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே புறநகர் ரயில்கள் இயக்கப்படாது.

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமால்பூர், அரக்கோணம் ஆகிய பகுதிகளுக்கு இயக்கப்படும் ரயில்கள் அட்டவணைப்படி இயக்கப்படும். ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கு பதிலாக 25 முதல் 40 நிமிட இடைெவளியில் கடற்கரை – பல்லாவரம் இடையே பயணிகள் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். மாலை 5 மணிக்கு மேல் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி ரயில்கள் இயக்கப்படும். எனவே பயணிகள் தங்கள் பயணங்களை திட்டமிட்டு மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!