18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » இலஞ்சி டிடிடிஏ டிஎஸ் டேனியல் கல்லூரியில் மாவட்ட அளவிலான கலைத் திருவிழா..

இலஞ்சி டிடிடிஏ டிஎஸ் டேனியல் கல்லூரியில் மாவட்ட அளவிலான கலைத் திருவிழா..

எழுதியவர்: Abubakker Sithik November 15, 2024, 9:35 pm

தென்காசி மாவட்டம் இலஞ்சி டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் கல்வியியல் கல்லூரியில் தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை சார்பில் மாவட்ட அளவிலான கலைத்திருவிழா நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இதில் முதற்கட்டமாக மாவட்டம் முழுவதும் உள்ள மேல்நிலைப் பள்ளிகளில் வட்டார அளவில் முதலிடம் பிடித்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்தினர்.

இப்போட்டியில் வெற்றி பெறுபவர்கள் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட உள்ளனர். இக்கலை விழா நிகழ்ச்சிகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி தலைமை வகித்து துவக்கி வைத்தார். மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) ஜெயபிரகாஷ் ராஜன், மாவட்ட உதவி திட்ட இயக்குனர் காதர் மீரான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி தாளாளர் ராஜகுமார் வரவேற்றார். கல்லூரி முதல்வர் (பொ) தங்கம் முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் கண்ணன் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!