17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமேஸ்வரத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து போராட்டம்..

இராமேஸ்வரத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து போராட்டம்..

எழுதியவர்: ஆசிரியர் March 30, 2018, 2:36 pm

இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து இந்து மக்கள் கட்சியினர் ராமேஸ்வரம் ரயில் நிலையம் முன்பு போராட்டம் நடத்தினர்.

காவிரி மேலான்மை சம்பந்தமாக உச்சநீதிமன்றம் உத்திரவிட்டும் இன்னும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகின்றது. இதே போன்று ராமேஸ்வரத்தில் இந்து மக்கள் கட்சியை சேர்ந்தவர்கள் ரயில் நிலையத்திற்க்கு ஊர்வலமாக வந்தவர்கள் இராமேஸ்வரம் ரயில் நிலையத்திற்குள் புகுந்து ரயிலை மறிக்க முயன்றனர். இதனால் இந்து மக்கள் கட்சியினரை, ரயில்வே போலிசார் தடுத்து நிறுத்தி கைது செய்து தனியார் திருமண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

மேலும் போராட்டக்காரர்கள் தெரிவித்ததாவது, ”மின்சாரத்தை எடுப்பதற்கும், மீத்தேன் திட்டத்திற்கும் தமிழகத்தில் அனுமதி கொடுக்கும் மத்திய அரசு தமிழக விவசாயிகளுக்கும், தமிழக மக்களுக்கும் காவிரி நீர் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க மறுப்பது ஏன் என்று கேள்வி எழுப்பினர். மத்திய அரசு உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!