18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » அரசு பள்ளியில் 52-ம் ஆண்டு விழா..

அரசு பள்ளியில் 52-ம் ஆண்டு விழா..

எழுதியவர்: ஆசிரியர் March 29, 2018, 10:24 am

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகேயுள்ள குஞ்சார் வலசையில் உள்ள மண்டபம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் 52-ம் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது.

இந்த விழாவில் மண்டபம் உதவி தொடக்க கல்வி அலுவலர் P.சுதாமதி தலைமையில் நடைபெற்ற விழாவில் கூடுதல் தொடக்க கல்வி அலுவலர் N. புல்லாணி, மேற்பார்வையாளர் M.ஆரோக்கிய ராஜ்குமார் முன்னிலையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் பா.லதா வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் முதல் மாணவராக வெற்றி பெற்றவர்களுக்கும் மற்றும் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. இடைநிலை ஆசிரியை J. நாக சக்தி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

விழாவில் மாணவ-மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.விழாவில் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் அசுபதி, கிராம கல்விக் குழு தலைவர் ஜெயக்குமார், கிராமத் தலைவர் மாரி, ஆசிரியர் பயிற்றுனர் அ.பஞ்சநாதன், பள்ளி மேலாண்மை குழு தலைவி திலகவதி ஆகியோர் கலந்து கொண்டனர். விழா முடிவில் பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி நன்றி கூறினார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!