18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » திண்டுக்கல் மாவட்டத்தில் 20 கடைகளுக்கு சீல், 150 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல், ரூ.6 லட்சம் அபராதம் – உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை..

திண்டுக்கல் மாவட்டத்தில் 20 கடைகளுக்கு சீல், 150 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல், ரூ.6 லட்சம் அபராதம் – உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை..

எழுதியவர்: Askar September 28, 2024, 9:05 am

திண்டுக்கல் மாவட்டத்தில் 20 கடைகளுக்கு சீல், 150 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல், ரூ.6 லட்சம் அபராதம் – உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை..

திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல் மற்றும் புறநகர்,சாணார்பட்டி,ஆத்துார், ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட அலுவலர் கலைவாணி தலைமையில் அலுவலர்கள் செல்வம்,ஜாபர் சாதிக்,ஜோதிமணி உள்ளிட்டோர் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின் போது கடைகளில் இருந்து 150 கிலோ அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து சாணார்பட்டியில்-2, ஆத்தூரில்-5, ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டியில் -5 என மொத்தம் 20 கடைகளுக்கு சீல் வைத்தனர்.மேலும் ரூ.6 லட்சம் அபராதமும் விதித்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!