18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருவேங்கடம் மூன்று நபர்கள் கொலை வழக்கு; குற்றவாளிகள் 4 நபர்களுக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு..

திருவேங்கடம் மூன்று நபர்கள் கொலை வழக்கு; குற்றவாளிகள் 4 நபர்களுக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு..

எழுதியவர்: Abubakker Sithik September 26, 2024, 11:56 pm

திருவேங்கடத்தில் மூன்று நபர்களை கொலை செய்த வழக்கில் 4 நபர்களுக்கு தூக்கு தண்டனை மற்றும் ஐந்து நபர்களுக்கு 5 ஆயுள் தண்டனை மற்றும் இரண்டு நபர்களுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து திருநெல்வேலி இரண்டாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தென்காசி மாவட்டம், திருவேங்கடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட உடப்பன்குளம் பகுதியில் கடந்த 2014 ஆம் ஆண்டு மூன்று நபர்களை கொலை செய்த வழக்கில் 25 நபர்கள் மீது அப்போதைய சங்கரன்கோவில் துணை காவல் கண்காணிப்பாளர் கலிவரதன் கொலை மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தார். இவ்வழக்கின் விசாரனையானது திருநெல்வேலி இரண்டாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் (PCR) நடைபெற்று வந்த நிலையில் 24.09.2024 அன்று வழக்கை விசாரணை செய்த நீதிபதி சுரேஷ்குமார் 11 நபர்கள் குற்றவாளி என்று தீர்ப்பளித்தார்.

இந்நிலையில் 26.09.2024 அன்று அவர்களுக்கான தண்டனைகள் அறிவிக்கப்பட்டது. அதில் 4 நபர்களுக்கு தூக்கு தண்டனை, ஐந்து நபர்களுக்கு ஆயுள் தண்டனை மற்றும் இரண்டு நபர்களுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இவ்வழக்கில் திறம்பட விசாரணை செய்து, சாட்சிகளை ஆஜர்படுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுத்த திருவேங்கடம் காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.R.ஶ்ரீனிவாசன் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!