17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருவேங்கடம் மூன்று நபர் கொலை வழக்கு; 11 நபர்கள் குற்றவாளி என தீர்ப்பு..

திருவேங்கடம் மூன்று நபர் கொலை வழக்கு; 11 நபர்கள் குற்றவாளி என தீர்ப்பு..

எழுதியவர்: Abubakker Sithik September 26, 2024, 11:39 am

திருவேங்கடத்தில் மூன்று நபர்களை கொலை செய்த வழக்கில் 11 நபர்கள் குற்றவாளிகள் என்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம், திருவேங்கடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட உடப்பன்குளம் பகுதியில் கடந்த 2014 ஆம் ஆண்டு மூன்று நபர்களை கொலை செய்த வழக்கில் 25 நபர்கள் மீது அப்போதைய சங்கரன்கோவில் துணை காவல் கண்காணிப்பாளர் கலிவரதன் கொலை மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தார். இவ்வழக்கின் விசாரனையானது திருநெல்வேலி இரண்டாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் (PCR) நடைபெற்று வந்தது.  

இந்நிலையில் வழக்கை விசாரணை செய்த நீதிபதி சுரேஷ்குமார், குற்றவாளிகளான உடப்பன்குளம் காந்தி என்பவரின் மகன் பொன்னுமணி, சங்கரநாராயணன் என்பவரின் மகன் குட்டி ராஜ், அய்யனார் என்பவரின் மகன் குருசாமி, செல்லையா என்பவரின் மகன் கண்ணன், முத்துசாமி என்பவரின் மகன் உலக்கன், சாமியா என்பவரின் மகன் காளிராஜ், வேலுச்சாமி என்பவரின் மகன் கண்ணன், வேலு என்பவரின் மகன் பாலமுருகன், ராமையா என்பவரின் மகன் முத்துகிருஷ்ணன், வெளியப்பன் என்பவரின் மகன் கண்ணன் மற்றும் கிருஷ்ணன் என்பவரின் மகன் சுரேஷ் ஆகிய 11 நபர்கள் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தார். மேலும் மேற்படி நபர்களின் தண்டனை விபரங்கள் 26.09.2024 (இன்று) அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார். இவ்வழக்கில் திறம்பட விசாரணை செய்து, சாட்சிகளை ஆஜர்படுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுத்த திருவேங்கடம் காவல் துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.R.ஶ்ரீனிவாசன் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!